அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் ...

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுர குமார திஸாநாயக்க சார்பில் இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் 10.30 அளவில் குறித்த கட்டுப்பணத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

இன்றைய தினம் அநுர குமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டதாகவும் எதிர்வரும் 7 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.