சஜித் - மைத்ரி கூட்டமைப்பு முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றி! கோத்தா அணி அதிர்ச்சியில்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தாமரை சின்னத்தை கைவிட்டு பொது சின்னமொன்றில் களமிறங்குவதற்கு, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மறுத்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், பெரமுனவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இதற்கிடையில், ஐக்கிய தேசியக் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், முக்கிய சந்திப்பொன்று நேற்றிரவு நடைபெற்றது.

குறித்த சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்த சந்திப்பில், ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், தவிசாளர் கபீர் ஹாசிம் ஆகியோர் பங்குப்பற்றினர்.

அத்துடன் ஜனாதிபதி தலைமையில் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் சிலரும் குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், பொதுச் சின்னத்துக்கு பொதுஜன பெரமுன இணக்கம் தெரிவிக்கவில்லை என நேற்றிரவு இடம்பெற்ற சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டது.

எனினும், ஐக்கிய தேசிய முன்னணி, யானை சின்னத்தை கைவிட்டுவிட்டு, அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கே தீர்மானித்துள்ளதாக சஜித் பிரேமதாஸ இதன்போது தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடல் மிகவும் சுமுகமான முறையில் வெற்றியளித்ததாக உள்ளக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.