ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை - JVP

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதில் எந்தவொரு சிக்கலும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்பினால் அதனுடன் பேச்சு நடத்த தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணி தனியாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ள நிலையில், அதனுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு விரும்பினால் அதனுடன் கூட்டுச் சேர்வது குறித்து ஆலோசிக்கலாம் என மக்கள் விடுதலை முன்னணி தரப்பிலிருந்து குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மூன்றாவது தரப்பாக ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளமை ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையச் செய்யும் ஒரு முயற்சி என பொதுஜன பெரமுனவின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையே இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கு கடும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.