கோதுமை மாவிலை மீண்டும் பழைய விலைக்கு.


கோதுமை மாவினை முன்னர் நிர்ணயிக்கப்பட்டிருந்த விலைக்கே விற்பனை செய்ய கோதுமை மா நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வாழ்க்கை செலவு குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

இம் மாதம் 6 ஆம் திகதி பிரீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தினால் அதிகரித்திருந்தது. அதற்கேற்ப பாண் விலையும் 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மா விலை அதிகரிக்கப்பட்டமைக்கு விளக்கமளிப்பதற்கு குறித்த நிறுவனங்களுக்கு 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

அத்தோடு உடன் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மாவை பழைய விலைக்கு விற்பனை செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.