தனது கடிதத்தை கையளித்தார் சஜித்..!

ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட தாம் தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, அமைச்சர் சஜித் பிரேமதாச நேற்று கட்சித் தலைமையிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இந்தநிலையிலேயே அவர் நேற்று தமது கடிதத்தை கையளித்திருப்பதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி இன்னும் தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்தும் இதுகுறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.