ஜனாதிபதி வேட்பாளராக இராணுவத் தளபதி நியமனம்.! உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!


தேசிய மக்கள் இயக்கத்தின் சார்பில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சிவில் சமூக அமைப்புகள் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள் இயக்கத்தின் மாநாடு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இடம்பெற்றது.

இதன்போதே இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல்கள் நடைபெறவுள்ளது.

இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் சஜித் பிரேமதாசவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் கோத்தபாய ராஜபக்சஷவும், தேசிய மக்கள் சக்தி என்ற அமைப்பின் ஊடாக அநுரகுமார திஸநாயக்கவும் பிரதான வேட்பாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.