யாருக்கு ஆதரவளிப்பது?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் தீர்மானிப்பதற்காக கூடிய சிறி லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இணக்கப்பாடுகள் இன்றி நிறைவடைந்தது.

கட்சியின் ஊடக பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் இறுதி தீர்மானம் மேற்கொள்வதற்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சிறிலங்கா லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றிரவு இடம்பெற்றது.

இதன்போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது? சிறி லங்கா பொதுஜன முன்னணியுடனான கூட்டணியின் சின்னம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை, இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் அனுப்பியுள்ள கடிதம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

எனினும் குறிப்பிடத்தக்க தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.