தீர்மானமிக்க கலந்துறையாடல் இன்று... கொழும்பு அரசியலில் பரபரப்பு ஏற்படுமா!


ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துறையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சந்திப்பு நேற்று முன்தினம் ,இடம்பெறவிருந்த நிலையில், அது இன்றைய தினம் வரை ஒத்திவைக்கப்பட்டது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாஸ அறிவித்து வரும் நிலையில் தானும் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

தற்போது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை ,இந்த சந்திப்பின் ஊடாக முடிவுக்கு கொண்டுவரப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.