வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை..!


நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, தென், மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அங்கு சில இடங்களில் 150 மில்லமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

2 மணிக்குப் பின்னர், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைப் பெய்வதுடன், பல இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப் அதிகரித்து பெய்யக்கூடும்.

அதிக மழைப் பெய்யும் காலப்பகுதியில் இடிமின்னல் தாக்கம் மற்றும் தற்காலிகமான கடும் காற்றும் வீசக்கூடும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.