சஜித் பிரேமதாஸவின் அதிரடித் தீர்மாணம்?

ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவினை தனித்து களமிறக்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதுகுறித்த முக்கிய கூட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் கபீர் காசிம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டத்தில் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவான ஐக்கிய தேசிய கட்சியின் 60 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சஜித்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அவரை தனித்து களமிறக்குவது குறித்து இதன்போது ஆராயப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.

இதன்காரணமாக ஐக்கிய தேசிய கட்சிக்குள் குழப்ப நிலை காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.