வேலையில்லா பட்டதாரிகளின் திடிர் தீர்மானத்தால் அதிர்ச்சியில் ஜனாதிபதி வோட்பாளர்கள்!!

வேலையில்லா பட்டதாரிகள் நியமனம் தொடர்பாக போராடிவரும் நிலையில் அவர்களுக்கு நியமனம் தொடர்பாக தீர்வு விடைக்காத நிலையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்குகளை அளிக்காது புறக்கணிக்க போவதாக தெரிவித்து. மட்டக்களப்பு காந்திப்பூங்காவில் இன்று(21) காலை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்;பாட்டம் இடம்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான வேலையில்லா பட்டதாரிகள், அவர்களுடைய பெற்றோர் கலந்துகொண்டனர்.

இதன்போது அரச நியமனம் கோரி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வந்தோம் ஆனால் இதுவரைக்கும் எமக்கு ஒழுங்கான நியமனங்கள் கிடைக்கவில்லை.

2019 ஆம் ஆண்டு வரைக்கும் இதுவரை பட்டதாரிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். 

இவர்களுக்கு அந்தந்த ஆண்டு நியமனங்களை வழங்கியிருந்தால் இவ்வாறு வேலையில்லா பட்டதாரிகள் அதிகரித்திருக்க முடியாது.

அரசாங்கம் எமக்கு நியமனங்கள் வழங்காது ஏமாற்றிவருகின்றது எனவே எமக்கு நியமனம் வழங்காவிடில் நாங்களும் எமது உறவுகள் இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்காது புறக்கணிக்கவுள்ளோம். ஏன அகில இலங்கை ரீதியாக வேலையில்லா பட்டதாரிகள்; தீர்மானம் எடுத்துள்ளோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேரலயில்லா பட்டதாரிகள் ஆகிய நாங்களும் எமது உறவுகள் உட்பட சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் இருக்கின்றது எனவே எமக்கான தீர்வு தரப்படவில்லை எனில் எதிவரும் ஜனாதிபதி தேர்தலில் எமது வாக்குகளை அளிக்காது புறக்கணிப்போம்.

எனவே இதன் முன்னோடியாக தேர்தல் ஆணையகத்திற்கு தபால் அட்டைகளை அனுப்பவுள்ளோம். ஆகவே எமக்கான தீர்வினை உடனடியாக அரசு பெற்றுத்தரவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.