வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிரடி எச்சரிக்கை..!


நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் மேல், சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினமும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை 8.30 முதல் இன்று அதிகாலை 3 மணிவரையான காலப்பகுதியில், அதிகபட்ச மழை வீழ்ச்சி எல்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

அங்கு 103 மில்லமீற்றர் அளவில் மழை பெய்துள்ளது.
அதேநேரம் கடும் மழை காரணமாக நீரில் மூழ்கிய தாழ்நில பிரதேசங்களின் தற்போது நீர் வழிந்தோடுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அசாதாரண காலநிலை காரணமாக இதுவரையில் ஒருவர் உயிரிழந்திருப்பதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.