இன்று எரிபொருள் விலை அதிகரிக்கும்?

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக எரிபொருள் விலைத் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவற்காக எரிபொருள் விலை சூத்திர குழு இன்று (10) கூடவுள்ளது.

அதன்படி, இன்று இரவு எரிபொருள் விலை குழு கூடவுள்ளதாக நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகளுக்கு அமைய இந்நாட்டு எரிபொருட்களின் விலையில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருள் விலை சூத்திர குழு கூடுகிறது.

அதன்படி, கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலைத் திருத்தத்தில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவாலும், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தன.

இந்த விலைத் திருத்தத்தில் சூப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், ஒடோ டீசலின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

எவ்வாறாயினும், சர்வதேச சந்தையில் நிலவும் எரிபொருட்களின் விலைகளை ஒப்பிடும் போது இன்றைய தினம் இந்நாட்டு எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.