கிரிந்த பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு பதற்ற நிலை.. முஸ்லிம் வீடுகளுக்கும் சேதம்.


முஸ்லிம் இளைஞர்கள் சிலரது தவறின் காரணமாக கிரிந்த பகுதியில் இரு சமூகங்களுக்கிடையே சிறு சலனம் ஏற்பட்ட நிலையில் அங்கு தற்போது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று பெரும்பான்மை ஒருவருடன் ஏற்பட்ட சிறு பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்ட
நிலையில், இன்று முஸ்லிம் இளைஞர்கள் இருவர் சண்டை பிடித்த போது ஒருவர் மற்றவரை பியர் போத்தல் ஒன்றினால் வீசி அடித்த போது அது சென்று பண்சலை ஒன்றிலுள் விழுந்துள்ளது.

இதனை அடுத்து பெரும்பான்மையினர் பிரச்சினைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட இருவரும் ஊரை விட்டு ஓடி விட்டதாகவும், அவர்களை கேட்டு தாக்குதல் இடம்பெற்ற தாகவும் அங்கிருந்த ஒருவர் தெரிவிக்கின்றார்.

சில முஸ்லிம் வீடுகளும் தாக்கப்பட்ட நிலையில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

தற்போது நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.