தீர்மானமிக்க மற்றுமொரு சந்திப்பு இன்று...

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பான நீண்டகால பேச்சுவார்த்தையின் ஒருகட்டமாக இன்றைய சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை அலரிமாளிகையில் இரவு 9.30க்கு இடம்பெறும் என்று தகவல் அறிந்த தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் சபாநாயகர் கருஜெயசூரிய கலந்து கொள்ள மாட்டார் என்பதோடு, இன்றைய பேச்சுவார்த்தையில் மேற்கொள்ளப்படும் தீர்மானம், கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நேற்றையதினம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக முத்தரப்பு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

இதற்கிடையில் சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நாளையதினம் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெறவுள்ளது.

கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை மறுதினம் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.