ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி உத்தரவு!!

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பிலான முக்கிய கலந்துரையாலொன்று ஜனாதிபதி தலைமையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அதிகாரிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்க வேண்டும் எனவும் தேவையெனில் இந்தநடவடிக்கைகளுக்காக முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

எதிர்வரும் 2 மாதங்களுக்கு மழை தொடர்வதற்கான சாத்தியம் நிலவுவதன் காரணமாக, அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி இதன்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட தென் மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் ரூ. 10 இலட்சம் வழங்குவதற்கான நடவடிக்கையை ஆரம்பிக்குமாறு ஆளுநர் ஹேமால் குணசேகர, குறித்த மாகாண பொதுச் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.