குழந்தையை பிரசவித்து தப்பிச்சென்ற தாய்... நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் சம்பவம்....


அதிக குருதி போக்கு என தெரிவித்து நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண், குழந்தையை பிரசவித்த பின்னர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த மாதம் 31ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட குறித்த பெண்ணை பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவர் குழந்தை பிரசவிக்க தயார் நிலையில் இருந்தமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, இந்த மாதம் 1ஆம் திகதி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

பிறந்த சிசு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தமை காரணமாக வைத்தியர்களினால் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் உள்ள குழந்தைகள் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த 6ஆம் திகதி, வங்கியொன்றில் கோரியிருந்த கடன் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலையில் இருந்து செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்த பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், கோரிக்கை கடிதமொன்றையும் வைத்தியசாலை நிர்வாகத்துக்கு அளித்துவிட்டு சென்றுள்ளார்.

எனினும், குறித்த பெண் மீண்டும் வைத்தியசாலைக்கு திரும்பாத நிலையில், அது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாருக்கு வைத்தியர்கள் அறிவித்துள்ளனர்.

கடிதத்தில் காணப்பட்ட முகவரிக்கு சென்று பொலிஸார் விசாரணை மேற்கொண்ட போது, அந்தப் பெண் வாடகைக்கு குறித்த வீட்டை பெற்று வசித்து வந்துள்ளதுடன், தற்போது அதனை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுக்கு மேலும் இரண்டு பிள்ளைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுடன், குறித்த பெண்ணை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.