முஸ்லிம் அரசியல் பிரமுகர்களின் சித்தரிப்புக்களுடன் சஜித்திற்கு எதிராக பதாதை!!

மட்டக்களப்பு - கிரானில் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்துக் கட்டப்பட்டிருந்த பதாதை இன்று நீக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்லுக்கான பிரச்சார நடவடிக்கைகள் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிரான் சுற்று வட்டத்திற்கு முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடன் முஸ்லிம் அரசியல் பிரமுகர்களை இணைத்து நேற்றையதினம் பதாதை ஒன்று கட்டப்பட்டிருந்தது.

பல்வேறு தரப்பிலிருந்தும் குறித்த பதாதைக்கு எதிராக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இன்று பதாதை அவ்விடத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

குறித்த பதாதையில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர்களாக முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் சித்தரிக்கப்பட்டிருந்ததுடன், கிழக்கு தமிழனமே விழித்துக் கொள்,சஜித்தை ஜனாதிபதியாக்குவதன் மூலம் கிழக்கை முஸ்லிம்களிடம் தாரைவார்ப்பதா? சஜித்தின் வெற்றி முஸ்லிம் ஆக்கிரமிப்பாளர்களின் வெற்றி என எழுதப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.