பரீட்சை சுமைகளை குறைக்க கல்வியமைச்சு விசேட திட்டம் வகுப்பு!

கல்விக்காக ஆகக்கூடுதலான நிதியை அரசாங்கம் முதலீடு செய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.  

கல்வியியற் கல்லூரிகளை நாடு முழுவதிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார். பரீட்சைகளின் சுமைகளை குறைப்பதற்காக கல்வியமைச்சினூடாக விசேட திட்டமொன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கல்வியியல் கல்லூரிகளில் பயிற்சிகளைப் பெற்ற 4,300பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம்  அலரிமாளிகையில் இடம்பெற்றது.  நிகழ்வில் உரையாற்றும்போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர்
ஆசிரியர் பயிற்சிக்காக பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ஆசிரியர்களை உருவாக்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்வியியல் கல்லூரி பீடமொன்று அண்மையில் குருநாகலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறான கல்லூரிகளை நாடு முழுவதிலும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நாட்டின் மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இதற்காக ஆசிரியர்களுக்கு சிறந்த பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.

மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கவேண்டுமென்றால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அவசியமாகும்.

இந்தவகையில் சிறந்த பயிற்சிபெற்ற ஆசிரியர்களிடம் பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒப்படைத்துள்ளோம்

பிள்ளைகளின் எதிர்காலத்தை ஒளிமயமாக்குவது பயிற்சிபெற்ற ஆசிரியர்களின் கடமையாகும்.

கல்வித்துறை முன்னேற்றத்துக்காக பெருமளவு நிதியை எமது அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் ஆசிரியர்களின் பயிற்சிகளுக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. அதேவேளை, 13ஆம் ஆண்டு வரையிலான கட்டாயக் கல்வியை வழங்குவதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

எமது அடுத்தகட்ட செயற்பாடாக பரீட்சைகளின் சுமைகள் குறைக்கப்படும். அதற்காக கல்வியமைச்சு விசேட திட்டமொன்றை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.