கடும் சிக்கலில் சிக்கியுள்ள கோட்டா!

அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டதற்கான முறையான ஆவணங்களை சமர்பிக்காது, இலங்கையின் பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாகப் பெற்றது குறித்து கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றவியல் புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணை அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது.

அத்துடன், அதன் நிலைமை கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடுமையான சட்ட சிக்கல்களை எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குடிவரவு - குடியகல்வுத் திணைக்களம் ஆரம்ப கட்டத்தில் அத்தியாவசிய ஆவணங்களை வழங்கத் தவறிவிட்டதனால் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பை ஆய்வு செய்ய குற்றவியல் புலனாய்வுத் துறை நீதிமன்ற உத்தரவைப் பெறவுள்ளது.

அதற்கமைய இரண்டாவது பி அறிக்கை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்த்துள்ளன.

இந்த நிலையில் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவலின் படி கோட்டாபய ராஜபக்ஷ மிகவும் கடுமையான சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.