தொழிற்சங்கங்களுக்கும் - அமைச்சரவை குழுவுக்கும் இடையில் இன்று சந்திப்பு.


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும், பணி பகிஷ்கரிப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை குழுவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) இடம்பெறவுள்ளது. 

இந்த சந்திப்பு பல்வேறு சந்தர்பங்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அரச தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணி பகிஷ்கரிப்பு இன்றைய தினத்திலும் முன்னெடுக்கப்படுகின்றது.

ரயில்வே தொழிற்சங்கங்கள் பல கடந்த புதன்கிழமையில் இருந்து முன்னெடுத்து வரும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதேவேளை, பல்கலைக்கழக தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணி பகிஷ்கரிப்பும் இன்று 21 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

அரச நிறைவேற்று அதிகாரிகள் சங்கத்தின் ஒன்றிணைந்த குழு கடந்த 25 ஆம் திகதி ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையும் தீர்வின்றி தொடர்கின்றது.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைப்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இதற்கமையவே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கும் குறித்த அமைச்சரவை குழுவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (30) இடம்பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.