கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்!!


நாளை அலரி மாளிகையில் நடைபெறவிருந்த இலங்கை அதிபர் சேவை தரம் 3 நியமனம் வழங்கும் வைபவம் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் இணையத்தளம் அறிவித்துள்ளது.

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்தவர்களுக்கான நியமனங்கள் வழங்குவதற்கு நாளை வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. எனினும் அதனை ரத்துச் செய்வதாக கல்வி அமைச்சு தற்போது அறிவித்துள்ளது.

இந்த ரத்துக்கான காரணத்தையோ அல்லது மேலதிக விபரங்களையோ கல்வி அமைச்சு வெளியிடவில்லை. எனினும் அரசியல் சூழ்நிலை காரணமாக இந்த நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.