ரணிலை சந்தித்த பிக்குகள் விடுத்த முக்கிய கோரிக்கை.... வேட்பாளரில் மாற்றம் ஏற்படுமா??


ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கரு ஜயசூரியவையும், பிரதமர் பதவிக்கு சஜித் பிரேமதாசவையும் நியமிக்குமாறு நீதிக்கான சமூக தேசிய முன்னணியின் பிக்குகள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

கரு ஜயசூரியவின் வாழ்க்கை கடந்த காலத்திலும் தான், நிகழ்காலத்திலும் தான் எந்தவொரு நபருக்கும் விரல் நீட்ட முடியாத அளவு தெளிவாக காணப்படுகின்றது. எனவே, எந்தவித பேதங்களையும் பார்க்காமல் கருஜயசூரியவுக்கு வேட்பாளர் பதவியை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் பிக்குகள் அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை பிரதமரிடமும் நேரில் சந்தித்து அச்சங்கத்தினர் முன்வைத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.