ரணில் விக்ரமசிங்கவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை...

இணக்கப்பாடு ஏற்படாத போதும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக அதன் பிரதித்தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையேயான முக்கிய கலந்துரையாடல் நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றது.

குறித்த இரண்டு பேருக்கும் மேலதிகமாக அமைச்சர்களான கபீர் ஹாசீம், மலிக் சமரவிக்ரம, ராஜித சேனாரத்ன மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரமதாச, கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பான விபரங்கள் எதிர்வரும் சில நாட்களில் வெளிவரும் என தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள் நடத்தப்படும்.

சகல விடயங்கள் தொடர்பிலும் பிரதமர் சிறந்த தெளிவை கொண்டுள்ளார்.

தொடர்ந்தும் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்த பெறுபேறு வெளியிடப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் சஜித் பிரமதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.