மைத்திரியின் திடீர் அறிவிப்பு! தடுமாறும் அரசியல் கட்சிகள்...

திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தைப் போன்றே இன்றும் கூட்டணி அல்லது முன்னணியின்றி எவராலும் ஆட்சியை கைப்பற்ற இயலாது என்றும், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இடசாரி முற்போக்கு முன்னணியாக ஒன்றிணைந்தவர்களின் அரசியல் செயற்பாட்டாளர்களினாலேயே முடியுமெனவும் தெரிவித்தார்.

நேற்று பிற்பகல் மாத்தறை வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாட்டுக்காக அரசியல் செய்யும் குழுவினரின் முன்னணியை உருவாக்க வேண்டுமெனத் தெரிவித்தார்.


திருடர்கள், ஊழல்வாதிகள், பாதாள உலக கோஷ்டியினர் மற்றும் கொலைகாரர்கள் அங்கத்துவம் பெறும் எந்த கட்சியாக இருந்தாலும் அந்த கட்சிக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி துணை போகாது என்றும், இன்று வலுப்பெற்று வரும் சுதந்திரக் கட்சியின் துணையின்றி எவராலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகொள்ள முடியாதென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

2015இல் ராஜபக்ச அரசு தோல்வியடைந்தது. அதற்கு அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் நாம் யாரையும் ஆதரிக்கவில்லை. இரண்டு கட்சிகளும் தோல்வியடைந்தன. ஆகவே, ஆட்சியை உருவாக்கும் கட்சி நாம்தான் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருங்கள் என்றார்.

எதிர்வரும் காலங்களில் உருவாகும் புதிய அரசாங்கம் நாட்டை நேசிக்கும் தேசப் பற்றுடைய அனைத்து இனப் பிரிவுகளுக்கிடையே நம்பிக்கையை உறுதி செய்யக்கூடிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமமாக வாழக்கூடிய உரிமையை உறுதி செய்வது காலத்தின் கட்டாயமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அந்நிய நாட்டு சக்திகளுக்கு அடிபணியாத அரசாங்கம் ஒன்று எதிர்வரும் காலங்களில் உருவாக வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தவிர்த்து ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆகிய இரு கட்சிகளும் தூதுவராலயங்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்க தூதர் தன்னை சந்தித்தபோது சேபா, எட்கா போன்ற உடன்படிக்கையெதையும் தான் ஜனாதிபதியாக இருக்கும் வரை செய்ய முடியாதென்பதை நேரடியாக கூறியதாக தெரிவித்தார்.

நாட்டைக் காட்டிக் கொடுக்கும் ஊழல் சக்திகளை தோல்வியடையச் செய்யும் மக்கள் நேய வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு தேவையாக இருப்பதுடன், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அடையாளம், அபிமானம் மற்றும் கட்சி உறுப்பினர்களின் கௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான வேலைத்திட்டமொன்றை எதிர்வரும் காலங்களில் சுதந்திரக் கட்சி முன்னெடுக்கும் என்றும் ஜனாதிபதிதெரிவித்தார்.

சுதந்திரக் கட்சியை நாடளாவிய ரீதியில் ஒருங்கிணைக்கும் மாவட்ட மாநாட்டுத் தொடரின் மூன்றாவது மாநாடு பெருந்திரளான கட்சி உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இன்று வெலிகம நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, குமார வெல்கம, மனோஜ் சிறிசேன மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்த அறிவிப்பு இரு பிரதான கட்சிகளையும் கலங்க வைத்துள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.