சர்வதேச சிறுவர் தினம் இன்று.


சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுவதுடன், சர்வதேச முதியோர் தினமும் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி சர்வதேச ரீதியில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமை பிரகடனத்தில் 1991 ஆம் ஆண்டு இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினம் இலங்கையில் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள். நாளைய எதிர்காலம் நன்றாக அமைய இன்றைய சிறுவர்களை நல்ல ஒரு பிரஜையாக உருவாக்கபட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

சிறுவர்கள் துன்புறுத்தல்கள் இன்று பொதுவாக நடக்கும் விடயமாகிவிட்டது. இந்நிலைமை மாற்றப்பட வேண்டும்.
சிறுவர்களை நாளைய தலைவர்களாக உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள், அதே போல் பெற்றோர்களிடமும் இருக்கிறது.மற்றும் சூழல், குடும்ப நிலைமை, நண்பர்கள் போன்ற இதர காரணிகளும் அதனை தீர்மானிக்கின்றன.
சர்வதேச ரீதியாக பல்வேறு வகைகளில் சிறுவர்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். பாடசாலை இடைவிலகல், வறுமை, போஷாக்கின்மை, பாலியல் வன்முறைகள் என அவர்களுக்கு எதிரான வன்முறைகளின் பட்டியல் நீள்கிறது.
இன்று வறுமையின் காரணமாக தாய்மார்கள் வெளியூர் வேலைக்குச் செல்வதால் சிறுவர்கள்  பல்வேறு கொடுமைகளை அனுபவிக்கின்றனர்.

போதைபொருள் பாவனை, விற்பனை அல்லது அந்நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து விலகியிருப்பதற்கான உரிமை சிறுவர்களுக்கு உண்டு. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுதல், அல்லது பாலியல் ரீதியாகத் தவறான பயன்களைப் பெறுதல், மற்றும் சட்டவிரோத பாலியல் நடவடிக்கைகளுக்காக தூண்டப்படுதல் ஆகியவற்றிலிருந்து விலகியிருப்பதற்கு சிறுவர்களுக்கு உரிமை உண்டு.

எங்கள் எதிர்காலத்தையும், சமூகத்தையும் தாங்கி நிற்கும்
பலம் மிக்க தூண்களாக நிலைபெறும் எங்கள் சிறுவர்களுக்கு
மகிழ்ச்சிகரமான சிறுவர் தின வாழ்த்துக்களை எம் தாய் டிவி தெரிவித்துக்கொள்கிறது.
"சிறுவர்களுக்கான அழகிய உலகத்தை
அன்பு கொண்டு நிரப்புவோம்..
*ThaiTv News*

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.