ஜனாதிபதி தேர்தல் முடிவில் ஜம்பர் அணியப்போவது யார் - சூடுபிடித்தது விவாதம்

கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் அதனை அணியவேண்டிய நிலையேற்படலாம் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச வெற்றிபெற்றால் கோத்தபாய ராஜபக்ச ஜம்பர் அணிய வேண்டிய நிலையேற்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ள கருத்திற்கே மகிந்த ராஜபக்ச பதில் கருத்தை வெளியிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற மத்துகம பேரணியில் ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற மறுநாளே பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் ஜம்பர் அணியவேண்டியிருக்கும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஐக்கியதேசிய கட்சியின் அமைச்சர்கள் சிலர் செய்து கொண்ட இரகசிய உடன்படிக்கைகள் காரணமாகவே ராஜபக்சாக்களை சிறையில் அடைக்கமுடியவில்லை சஜித் ஜனாதிபதியானதும் அந்த யுகம் முடிவிற்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளிக்கையிலேயே மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு சிறைச்சாலை உடையை அணிவிக்க விரும்புவர்கள் எதிர்காலத்தில் ஜம்பர் அணியவேண்டிய நிலையேற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் எதிரணியினரை பழிவாங்குவது குறித்தே கவனம் செலுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.