வட கொரியா இரு ஏவுகணை வீச்சு!


அணு விவகாரம் குறித்து அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தைக்கு விருப்பத்தை வெளியிட்டு ஒருசில மணி நேரங்களில் வட கொரியா இரு ஏவுகணைகளை கடலில் பாய்ச்சியுள்ளது.

நேற்றுக் காலை மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை வீச்சு தென் கொரிய இராணுவத்தால் அவதானிக்கப்பட்டுள்ளது. இவை குறுகிய தூர ஏவகணைகள் என்று அந்த இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள், 330 கிலோ மீற்றர் தொலைவுக்கு பாய்ந்து சென்றதாக தென் கொரிய இராணுவம் கூறியது.

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையேயான எல்லைப் பகுதியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னும் கடந்த ஜூன் மாதம் சந்தித்துப் பேசினர். அதன் பின்னர் வட கொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது இது 8ஆவது முறையாகும்.

இந்த ஏவுகணை வீச்சுக்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன், கொரிய பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக மாற்றுவது தொடர்பாக அமெரிக்காவுடன் இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்த வட கொரியா விருப்பத்துடன் உள்ளதாக வட கொரிய துணை வெளியுறவு அமைச்சர் சோ சொன் ஹுயி தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா புதிய அணுமுறையை கையாள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் அது முறிந்துவிடும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அண்மையில் அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த நம்பிக்கையை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரான மைக் பொம்பியோ வெளிப்படுத்திய பின்னர் வட கொரிய அமைச்சரின் கருத்து வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.