டெங்கு நோய் அபாயம்!தற்போது பெய்துவரும் பருவப்பெயர்ச்சி மழையை தொடர்ந்து டெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக, சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.


இவ்வருடத்தின் ஜனவரி முதல் நேற்று (17) வரையான காலப்பகுதிக்குள் டெங்கு நோய் காரணமாக, 70 பேர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு, மேற்குறிப்பிடப்பட்ட காலப்பகுதிக்குள் நாடளாவிய ரீதியில் 46,896 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

07 மாவட்டங்களில் சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகள் மிகுந்த அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களே மிகவும் அபாயமுள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும், கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது, இந்த வருடத்தில் டெங்கு நோயால் ஏற்பட்ட உயிரிழப்புகள் சற்று அதிகமாகவுள்ளது. கடந்த 2018 இல் டெங்கு காரணமாக 58 பேர் மாத்திரமே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.