நாட்டில் சில சேவைகள் திடிரென முடக்கம்; மக்கள் பெரும் அவதி!!


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள மருத்துவமனைகளில் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.

அந்த சங்கத்தின் ஊடக குழுவின் பிரதிநிதியான மருத்துவர் ப்ரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் மகப்பேற்று, சிறுநீரக, புற்றுநோய் மற்றும் சிறுவர் ஆகிய மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 5 கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் ஆரம்பித்து பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திர தேசிய ஊழியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

80 பேருந்து சாலை ஊழியர்கள் இதுவரை பணிப்புறக்கணிப்பில் இணைந்துள்ளனர் என்று அந்த சங்கத்தின் தலைவர் சமன் புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.