கோட்டாபய சார்பில் கட்டுப்பணம்..


சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்காக இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அவர்சார்பில் இந்த கட்டுப் பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிறிலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர், சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல்வீரவன்ச உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரையில் மூன்று பேர் கட்டப்பணம் செலுத்தி இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதேநேரம், தேர்தல் சட்டங்களை மீறுகின்ற செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகளை ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் அல்லது, நாடெங்கிலும் உள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் முன்வைக்க முடியும் என்று தெரிவித்துள்ளது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.