உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் புலனாய்வு செய்யவும், விசாரணை செய்யவும் மற்றும் அறிக்கையிடவும் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஐவர் அடங்கிய விசாரணை ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் நேற்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதியரசர் ஜனக்க டிசில்வா தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக் குழுவில் மேன்முறையீட்டு நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரட்ன, இளைப்பாறிய மேல் நீதிமன்ற நீதியரசர்களான நிஹால் சுனில் ராஜபக்ஷ, அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து மற்றும் இளைப்பாறிய அமைச்சுச் செயலாளர் டபிள்யூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்த ஆணைக் குழுவானது எதிர்வரும் 6 மாதங்களுக்குள் தமது விசாரணைகளை பூர்த்தி செய்யவுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.