இன்று முதல் காலநிலையில் திடீா் மாற்றம்..

நாட்டின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை இன்று முதல் குறைவடையக்கூடும் என எதிா்பாா்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிா்வு கூறியுள்ளது.

எனினும் மேல், தென், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன் மன்னாா் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தொிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக 23 ஆயிரத்து 720 குடும்பங்களைச் சேர்ந்த 92 ஆயிரத்து 593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 5 ஆயிரத்து 422 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரத்து 559 பேர் 41 நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கலாநிதி அமலநாதன் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.