பாராளுமன்ற விசேட தெரிவு குழுவில் ஜனாதிபதி!


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் பாராளுமன்ற விசேட தெரிவு குழுவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (20) சாட்சியமளிக்க உள்ளார். 

ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று இந்த சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த தெரிவுக்குழுவின் அறிக்கை இன்று வெளியிடப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட போதிலும் அது தாமதமாகியுள்ளது.

பாராளுமன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் இந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. எனினும் பின்னர் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை அந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த தெரிவுக்குழுவின் அறிக்கையை தயாரிக்கும் பணிகள் குறிப்பிடதக்களவு நிறைவடைந்துள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.