பச்சை கொடி காட்டினார் ரணில்!! சஜித்துக்கு கிடைத்த மகா அதிஷ்டம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமாகியது சஜித் பிரேமதாசவை தெரிவு செய்வதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நேற்று (24) இரவு நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கட்சித் தலைவர்கள் ஏகமனதாக தமது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிக்குமாறும் கூட்டணியிலுள்ள கட்சித் தலைவர்கள் கேட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.தே.க.யின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.