சஜித் பிரேமதாச அதிரடி அறிவிப்பு!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச இன்று காலை முக்கிய ஊடக சந்திப்பொன்றினை நடத்தியிருந்தார்.

அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த ஊடக சந்திப்பில் அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், மங்கள சமரவிர, ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பின்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சிக்குள் எழுந்துள்ள குழப்ப நிலைக்கு கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்ததாக சஜித் பிரேமதாச குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக கட்சியின் மத்திய குழுவை உடனடியாக கூட்டுமாறு சதித் கேட்டுக் கொண்டார். 

அத்துடன் இது தொடர்பான கடிதம் ஒன்றையும் தான் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கையளித்தாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சகல தகுதிகளும் தனக்கு உள்ளதாகவும், அதற்கான மக்கள் ஆணை தனக்கு இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தமை விசேட அம்சமாகும்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.