ஐ.தே.க வின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ரனில் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!


ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவைக் கூட்டி இறுதி முடிவை அறிவிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான மற்றுமொரு சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று மாலை இடம்பெற்றது.

முன்னதாக நேற்று முன்தினம், அலரிமாளிகையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிச் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பை பல அமைச்சர்கள் புறக்கணித்தனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளது தலைவர்களது கூட்டத்தை மீண்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைய, நேற்று இடம்பெற்ற கூட்டத்தில், குறித்த விடயத்தை பிரதமர் கூறியதாக, சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனநாயக தேசிய முன்னணியின் யாப்பும், அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.