விரைவு படுத்தப்படும் வழக்கு விசாரணைகள்! பிரசாரம் செய்ய முடியாத நிலையில் கோத்தபாய


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச எந்த வகையிலும் சவாலாக அமையமாட்டார் என அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவிலும் அதேபோல உள்நாட்டிலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்குகளின் விசாரணைகளும் விரைவுபடுத்தப்பட்டிருப்பதால் அவரால் சரிவர தமது பிரசாரங்களைக்கூட செய்யமுடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கண்டியில் வைத்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கோத்தபாய ராஜபக்ச எமக்கு எந்த விதத்திலும் சவாலாக இருக்கமாட்டார். கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்தில் எமக்கு சவாலாக இல்லாதபோது இப்போது சாதாரண ஒரு வேட்பாளராக வந்திருப்பது எமக்கு சவாலாக அமையாது.

பிரச்சினை ஒன்று உள்ளது  கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டிலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வழக்குகள் வாரந்தோறும், தினமும் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

அதனால் எவ்வாறு அவர் தேர்தல் பிரசாரங்களை செய்யமுடியுமா? இதுவும் மகிந்த ராஜபக்சவின் ஒரு டம்பியாக இருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஜனநாயகக் கட்சி. மாறாக ஏகாதிபத்திய கட்சியல்ல.

அதனால்தான் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன, பிரச்சினைகள் மற்றும் மோதல்களும் ஏற்படுகின்றன. ஆனால் இறுதியில் சிறந்தவொரு வேட்பாளரை இவ்வார இறுதியில் முன்நிறுத்துவோம்.

சரியான காலத்திற்கு முன்னரே பழுக்காமல் வருகின்ற பழம் வெம்பியதாகவும், சரியான காலத்தில் பழுக்கின்ற பழம் இனிப்பானதாகவும் இருக்கும்.

அதனால் நாங்கள் காலத்திற்கு முன்னரே அறிவிப்பதற்கு நாங்கள் விருப்பப்படவில்லை. சரியான, சிறந்த அறுவடையை தரக்கூடிய மற்றும் வெற்றிபெரும் வேட்பாளரையே நாங்கள் அறிவிப்போம்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.