கோதுமை மாவின் விலையை குறைக்கப் போவது இல்லை!


நிர்ணய விலையினை விட அதிக விலைக்கு கோதுமை மாவினை விற்பனை செய்த 200 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. 

எவ்வாறாயினும், அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை ஒருபோதும் குறைக்கப் போவதில்லை என ப்ரீமா நிறுவனம் நாட்டின் ஏனைய கோதுமை மா விற்பனை முகவர்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலையை 5 ரூபாய் 50 சதத்தினால் அதிகரிக்க ப்ரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்கள் தீர்மானித்திருந்தன.

அதன்படி, 90 ரூபாவாக காணப்பட்ட கோதுமை மாவின் விலை 95 ரூபாய் 50 சதமாக அதிகரிக்கப்பட்டது.

இதன் காரணமாக , 450 கிராம் பாணின் விலையை 02 ரூபாவாலும், ஏனைய பேக்கரி உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்கவும் குறித்த சங்கங்கள் தீர்மானித்தன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.