ஆசிரியர்களின் சுகயீனப் போராட்டம் – கல்வி அமைச்சரின் அதிரடி அறிக்கை!!

தமது போராட்டத்தின் பயனாகவே சம்பள உயர்வு கிடைத்ததாகக் கூறி தமது உறுப்பினர்களை ஏமாற்ற எடுக்கப்பட்டுள்ள சதி திட்டத்தில் சிக்கி ஏமாறுவது ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பொருத்தமான செயல் அல்லவென கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களும் அதிபர்களும் நேற்று ஆரம்பித்த சுகயீன விடுமுறை போராட்டத்தைக் கண்டித்து கல்வியமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தர்ப்பவாதத்துக்கு ஒத்துழைப்பு வழங்காமையே கெளரவத்துக்குரிய ஆசிரியர்களதும் அதிபர்களதும் தார்மீகப் பொறுப்பு எனவும் அமைச்சர் அதில் கூறியுள்ளார்.

அனைத்து அரசாங்க உத்தியோகத்தர்களதும் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்களும் அதிபர்களும் திட்டமிட்டு ​கடமைக்கு சமுகமளிக்காமல் வேலைநிறுத்தத்தில் களமிறங்கியிருப்பது நியாயமற்ற செயலென்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிற்சங்கப் போராட்டம் நடத்துவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் சம்பள அதிகரிப்புக்கான ஏற்பாடுகள் வழங்கப்படுவதை அறிந்த பின்னரும், தமது போராட்டத்தின் பயனாகவே சம்பள உயர்வு கிடைத்ததாகக் கூறி தமது உறுப்பினர்களை ஏமாற்ற எடுக்கப்பட்டுள்ள சதி திட்டத்தில் சிக்கி ஏமாறுவது ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் பொருத்தமான செயல் அல்லவென்றும் அமைச்சர் அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் நேற்று ஆரம்பித்துள்ள சுகயீனப் போராட்டம் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட ஒன்று அல்லவெனவும், தமக்கு கிடைக்கவுள்ள சம்பள முரண்பாட்டை தீர்த்து வைப்பதற்கு அரசாங்கத்தை வலிறுத்துவதற்கான ஒரு நடவடிக்கையே எனவும் தொழிற்சங்கங்கள் நேற்று தெரிவித்தன.

நேற்று அதிபர், ஆசிரியர்கள் முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டத்தினால், நாடு முழுவதிலும் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. அரசாங்கம் இந்தப் போராட்டத்தின் பின்னரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைக்கு தயாரில்லாது இருந்தால், அடுத்த கட்டமாக ஐந்து நாள் சுகயீனப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கள செயலாளர் ஜோசப் ஸ்டாலின் நேற்று அறிவித்திருந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.