தீவிரமாக பிரசாரங்களுக்கு தயாராகியுள்ள பிரதான அரசியல் தரப்புக்கள்! முதலில் களத்தில் இறங்குபவர் இவரே!


ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஒக்டோபர் 7ஆம் திகதி நிறைவுக்கு வரவுள்ள நிலையில் மறுதினமே பிரதான அரசியல் தரப்புக்கள் தமது பிரசாரங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் அவ் வணியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஒக்டோபர் 8 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு அநுராதபுரம், தம்புத்தேகமவில் நடைபெறவுள்ளது.

அநுரகுமார தனது சொந்தவூரிலிருந்து தேர்தல் பிரசாரக் கூட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளார்.

எமது நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒக்டோபர் 9 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.

அவ்வணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர்.

இதனையடுத்து நாடாளவிய ரீதியில் பிரசார கூட்டங்களை நடத்திச் செல்வதற்கு திட்டமப்பட்டுள்ளது.
மேலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஒக்டோபர் 10ஆம் திகதி காலி முகத்திடலில் தனது முதலாவது பிரசாரக் கூட்டத்தை ஆரம்பிக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக்கட்சி தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவுக்கு ஆதரவு வழங்கும் தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதானிகளும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதற்காக பிரதான கட்சிகளில் குழுக்களை அமைக்கப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் ஸ்ரீலங்கா, சுதந்திரக் கட்சி கூட்டணியில் இணைந்தாலும் அல்லது இணையாவிட்டாலும் கூட ஒக்டோபர் 15 ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு பொதுஜன முன்னணி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனமும் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ள நிலையில் அதனை வெளியிடும் தினம் குறித்த இறுதி தீர்மானம் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஜனநாயக தேசிய முன்னணியும் ஒக்டோபர் நடுப்பகுதியில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்கு உத்தேசித்துள்ளது. மக்களிடம் கருத்துக் கோருவதற்காகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதோடு பங்காளிக்கட்சிகளின் அங்கீகாரத்துடன் கூட்டணி உடன்படிக்கைக்கு பின்னரே அதனை வெளியிடுவதற்கும் முடிவெடுக்கப்பட்டள்ளதாக அறிய முடிகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.