பாண் இறாத்தல் ஒன்றின் விலை!


பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்பட்ட போதிலும் பழைய விலைக்கே பாண் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

6 ஆம் திகதி நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 2 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தது.

பிரிமா கோதுமை மாவின் விலையை அதிகரிக்க, பிரிமா நிறுவனம் தீர்மானித்துள்ளதால் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

1 கிலோ கிராம் பிரிமா கோதுமை மாவின் விலையை 5 ரூபா 50 சதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து விவசாயத்துறை அமைச்சருடன் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவுக் குழு கூட்டத்தின் போது கோதுமை மா நிறுவனங்கள் முன்னர் இருந்த விலையிலேயே கோதுமை மாவை விற்பனை செய்ய இணக்கம் தெரிவித்திருந்தது.

இந்நிலையிலேயே பாணின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.