தேர்தலை முன்னிட்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் கணக்குகள் ஆரம்பம்!! அதிர்ச்சியில் பேஸ்புக் நிறுவனம்!!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஆயிரக்கணக்கான போலி பேஸ்புக் மற்றும் டுவிட்டர் கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களினூடனூடாக பல தரப்பினருக்கும் எதிராக அவதூறை ஏற்படுத்தும் மற்றும் குரோதத்தை தூண்டும் வகையிலான கருத்துக்கள் வௌியிடப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு தெரிவித்துள்ளார்.

இதனிடையே தேர்தலின் போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைக் கண்காணிக்குமாறு இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் ரஜீவ் யசிரு ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.