சஜித்துக்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது


இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

குருணாகலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். 

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பிலேயே தற்போது எமது அவதானம் உள்ளது. 

பிரபலமான வேட்பாளர் ஒருவரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து களமிறக்குவார்கள் என எதிர்ப்பார்க்கிறோம். 

எனினும் இதுவரை அது தொடர்பில் இறுதி தீர்மானம் கிடைக்கவில்லை. 

எதிர்வரும் வாரத்தில் அது தொடர்பான இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கிறோம். 

அதனை தொடர்ந்தே எமது தீர்மானத்தை எடுக்கவுள்ளோம். 

எடுக்கும் தீர்மானத்தை மற்றைய கூட்டணி கட்சிகளுடன் கலந்தாலோசித்து எடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார். 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.