ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச நாட்டு மக்களுக்கு இன்று வழங்கியுள்ள உறுதிமொழி!

தாம் ஒருபோதும் அரச மாளிகையில் இருந்து ஆட்சி புரிய போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மனிதாபிமானமிக்க ஒருவரையே நாட்டு மக்கள் ஜனாதிபதியாக எதிர்பார்க்கின்றனர். அதற்கான உறுதிமொழியையும் மக்கள் தற்போது வழங்கியிருப்பதாகவும் காலி எல்பிட்டியவில் இன்று நடைபெற்ற கூட்டமொன்றின்போது அமைச்சர் சஜித் தெரிவித்துள்ளார்.


ஆட்சி அதிகாரங்கள் தமக்கு கிடைத்தாலும் தாம் தற்போது வாழும் இடத்திலிருந்தே ஆட்சி புரியவுள்ளதாகவும் கூறிய அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு வழங்குமாறு மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

அவ்வாறு ஆட்சி கிடைத்தால் 24 மணி நேரமும் தாம் மக்கள் சேவையில் ஈடுபடபோவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.