வசமாக மாட்டிக்கொண்டாரா பிரதமர்..? பல உண்மைகள் அம்பலம்...!

விவசாய அமைச்சில் காணப்படும் DPJ கட்டிடத்தை பெற்றுக்கொள்வதற்கான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே மேற்கொண்டார் என முன்னாள் விவசாய துறை அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையில் நேற்றைய தினம் சாட்சியம் வழங்கிய போதே துமிந்த திசாநாயக்க இதனை தெரிவித்தார்.</p> 

<p>விவசாய அமைச்சு விவசாய மாளிகைக்குள் உள்ளடக்கப்பட்டதன் பின்னர் அமைச்சினை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான தேவை ஏற்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

விவசாய மாளிகை இயங்கி வந்த கட்டடத்தை பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்கு சுவீகரிப்பதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் அமைச்சின் நடவடிக்கைகள் D.P.J. கட்டடத்திற்கு மாற்றப்பட்டது.

புதிய கட்டிடத்திற்கு கொண்டு செல்வதற்கு பல இடங்கள் பார்வையிடப்பட்டதாகவும் அந்த விடயத்தில் தாம் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றதன் பின்னர் ஏனைய அனைத்து நடவடிக்கைகளையும் அவரே நிறைவேற்றினார் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் 20 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவில் மீண்டும் சாட்சியங்கள் வழங்க அழைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன்னிலையாகுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் சாட்சியங்கள் வழங்குவதற்காக இன்று (11) ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளராகக் கடமைாற்றும் I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஒழுக்காற்று விசாரணை தொடர்பில் சாட்சியம் வழங்குவதற்காக அமைச்சர் இன்று முன்னிலையாகவுள்ளார்.

கல்வி அமைச்சரினால் தீங்கிழைக்கும் நோக்கில் தமக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக I.M.K.B.இளங்கசிங்க, ஜனாதிபதி ஆணைக்குழுவில் செய்த முறைப்பாட்டிற்கு அமைய அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

பாடசாலைப் புத்தகங்களில் அமைச்சரின் நிழற்படம் அச்சிடப்பட்டமை தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது வாக்குமூலம் வழங்கிய I.M.K.B. இளங்கசிங்கவுக்கு இடமாற்றம் வழங்குவதற்கும் கல்வி அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, I.M.K.B. இளங்கசிங்கவுக்கு மீண்டும் கல்வி அமைச்சின் வௌியீட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பதவி வழங்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், கல்வி அமைச்சினால் I.M.K.B. இளங்கசிங்கவுக்கு எதிராக மீண்டும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையிலேயே அமைச்சர் அகில விராச் காரியவசம் மீண்டும் சாட்சியங்கள் வழங்க அழைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.