மக்களின் அன்றாட வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட மழை வௌ்ளம்!!

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் இரண்டு மாவட்டங்களில் 1475 குடும்பங்களை சேர்ந்த 5539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காலி மற்றும மாத்தறை மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 12 வீடுகள் வெள்ளத்தினால் முழுமையாக சேதமடைந்துள்ளதோடு, 365 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காலி, மாத்தறை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவென தலா பத்து இலட்சம் ரூபா உடனடியாக வழங்கப்படவுள்ளது.

இதற்கு மேலதிகமாக 27 இலட்சம் ரூபா இரண்டு மாவட்டங்களுக்கும் வழங்கப்படவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 24 மணித்தியாலங்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

நிலையத்தின் தொலைபேசி இலக்கமான 117 என்ற இலக்கத்தை தொடர்பு கொள்வதன் மூலம் இது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

மேலும் மாத்தறை மாவட்டத்தின் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மின் இணைப்புக்களுக்கான மின்சார விநியோகம் தற்காலிகமாகத் தடைப்பட்டுள்ளதக்க இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.