8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம்!


சிலாபம் தலைமையக பொலிஸ் நிலையத்தின் ஊழல் ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிய 8 பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் ஐவரும் பொலிஸ் கான்ஸ்டபள் சாரதி ஒருவரும் அடங்குகின்றனர்.

வென்னப்புவ பகுதியில் கடந்த 6 ஆம் திகதி ஹோட்டல் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அறுவரை பொலிஸார் கைது செய்தனர்.

இதன்போது, அங்கிருந்த 20 பேரில் ஒன்பது பேர் மட்டுமே கைது செய்யப்பட்ட நிலையில் எஞ்சியவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், சூதாட்ட களத்தில் இருந்த பணம் மற்றும் சந்தேக நபர்கள் வசமிருந்து பணம் ஆகியவற்றை பெற்றுக்கொண்டு அவர்களை கைது செய்யாதிருந்தமை தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமையவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் நாத்தாண்டிய உதவி பொலிஸ் அதிகாரியால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த 8 பொலிஸ் அதிகாரிகளும் பணி நீக்கம் செய்யப்பட்டதக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.