வேட்பாளரின் வயதெல்லையை 70 ஆக மட்டுப்படுத்த யோசனை!!


தேர்தல் ஒன்றில் வேட்பாளராக போட்டியிடுபவரது அதிகபட்ச வயதெல்லையாக 70 வயதைக் கொண்டுவருவதற்கான யோசனை ஒன்றை தேசிய மக்கள் சக்தி அமைப்பு முன்வைத்துள்ளது.

தமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அதனை உள்வாங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்பொழுது அவ்வமைப்பின் கூட்டணி அமைப்புக்கள், கட்சிகள் இணைந்து தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு கூறியுள்ளது.

எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம் திகதி அவ்வமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளதாகவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் பல்வேறு சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து இந்த தேசிய மக்கள் சக்தி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.