4286 பேருக்கு ஆசிரியர் நியமனம்.


கல்வி துறையை தற்போதைய அரசாங்கம் நவீனமயப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 2015/2017கல்வியாண்டுக்கான போதனா கல்வி பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நியமனங்களை வழங்கிவைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது உரையாற்றிய, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி துறையின் மனித வள மற்றும் பௌதீக வளர்ச்சிக்காக தற்போதைய அரசாங்கம் பாரிய அர்ப்பணிப்பு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்நிகழ்வில் 4286 டிப்ளோமாதாரிகளில் சிங்கள மொழிமூலமான டிப்ளோமாதாரிகள் 2340 பேருக்கும் தமிழ் மொழி மூலமானவர்கள் 1300 பேருக்கும் ஆங்கில மொழிமூலமானவர்கள் 646 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.